சொந்த மகனையே கொலை செய்த தந்தை; இலங்கையில் பயங்கரம்
தெஹியத்தகண்டிய, சேருப்பிட்டிய பிரதேசத்தில் மகனை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (30) காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் தெஹியத்தகண்டிய , சேருப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மருமகள் மருத்துவமனையில்
குடும்பத்தகராறு காரணமாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலின் போது, உயிரிழந்தவரது மனைவியும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்த மகனின் சடலம் பொலன்னறுவை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.