மூன்று கால்களை இழந்த முன்னாள் போராளி குடும்பம்; வியக்கவைத்த தன்னம்பிக்கை (Video)
வன்னி பெரு நிலப்பரப்பின் பூநகரி பள்ளிக்குடா கிராமத்தில் வாழும் ஓர் போராளி குடும்பத்தில், கணவர் இரு கால்களையும் இழந்த நிலையில், மனைவியும் ஓர் முன்னாள் போராளி என்பதுடன், போர்க்காலத்தில் அவரும் ஓர் காலை இழந்த நிலையில் தன்னம்பிக்கை தளராது இரு பெண் குழந்தைகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.
எம்மினத்தின் விடிவுக்காய் தம்மை அர்ப்பணித்து போராடிய முன்னாள் போராளிகளை அலட்சியப்பட்டுத்தும் சில நபர்களும் நம்முடன் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்கள் என்பது பெரும் வேதனைக்குரியது.
எனினும் அதனையும் பொருட்படுத்தாது யாரிடமும் கையேந்தாது தமது வாழ்க்கையை முன்னெடுத்துச்செல்லும் தளராத அவர்களின் மன உறுதி வியக்கவைக்கின்றது.
ஒருகாலத்தில் போற்றிப்புகழப்பட்ட வீரர்கள் இன்று சமூகத்தில் சிலரால் ஒதுக்கப்படும் நிலை கவலைக்குரிய ஒன்றாகும்.