யாழில் கோரவிபத்தில் சிக்கிய மருத்துவர்
யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை பேரூந்து சாலைக்கு அண்மித்த மருதடி பகுதியில் மருத்துவர் ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் படுகாயமடைந்த வைத்தியர் பருத்தித்துறை ஆதாரவைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
பருத்தித்துறை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த வைத்தியரும், எதிரே வந்த சிறிய ரக வாகனமும் எதிரெதிரே மோதியே குறித்த விபத்து இடம்பெற்றது.
விபத்தில் காயமடைந்த மருத்துவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.