கொழும்பில் சொகுசு விடுதியில் உயிர்மாய்த்துக்கொண்ட பொதுமகன்
கொழும்பில் உள்ள “City of Dreams” வளாகத்தில் அமைந்துள்ள நுவா (Nuwa) சொகுசு விடுதியில் தங்கியிருந்த 45 வயதுடைய பொதுமகன் ஒருவர், அவர் தங்கியிருந்த அறையில் தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பொதுமகன் கடந்த நான்கு நாட்களாக அந்த விடுதியில் தங்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது, அறை கதவு நீண்ட நேரமாக பூட்டப்பட்டிருப்பதை கவனித்து விடுதியின் பணியாளர்கள் காவல்நிலையத்திக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பின்னர் காவல்துறையினர் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
உடற்கூடு பரிசோதனையில் அவர் தூக்கிலிட்டு உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், குறித்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் கண்டி பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.