சந்தேகத்திற்கிடமான முறையில் காயங்களுடன் சடலம் ஒன்று மீட்பு
கம்பஹா படல்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஸ்டார்வத்தை, ஆடிமுல்ல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
குறித்த பகுதியில் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக நேற்று திங்கட்கிழமை (01) இரவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சடலம் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் ஆடிமுல்ல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று செவ்வாய்க்கிழமை (02) நீதவான் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் படல்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.