இலங்கையில் பொலிஸாரின் அதிரடியால் ஒரே நாளில் கைதான 900 பேர்
ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கமைய, போதைப்பொருள் அற்ற தேசத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ் நேற்று சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட அதிரடிச் சோதனைகளில் 906 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்புகள் குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளதாவது:-

சுற்றிவளைப்புச் சோதனைகள்
நேற்று ஒரே நாளில் மாத்திரம் 965 சுற்றிவளைப்புச் சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 9 பேர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பான விசாரணைகளுக்கமைய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான 4 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
அரசின் இந்தத் தேசிய திட்டத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.