இலங்கை ஜனாதிபதி அநுர குமாரவிடம் நற்சான்றிதழ்களை கையளித்த 9 தூதுவர்கள்!
இலங்கைக்கான புதிய தூதுவர்கள் 9 பேரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (28) முற்பகல் கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் தமது நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளனர்.
புதிய தூதர்கள் புர்கினா பாசோ, போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, அஜர்பைஜான் குடியரசு, ஜார்ஜியா, பெலாரஸ் குடியரசு, ஆர்மீனியா குடியரசு, ஸ்பெயின் இராச்சியம், காங்கோ குடியரசு மற்றும் கினியா குடியரசு ஆகியவற்றின் புதிய தூதுவர்களும் கென்யாவின் புதிய உயர்ஸ்தானிகரும் இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.
இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகரின் விபரம் வருமாறு,
01.கலாநிதி டிசையர் போனிபஸ் சம் - புர்கினா பாசோ தூதுவர் (புதுடில்லி)
02. ஹரிஸ் ஹெர்லே - பொஸ்னியா மற்றும் எர்செகோவினா தூதுவர் (புதுடில்லி)
03. எல்சின் ஹுசைன்லி - அசர்பைஜான் குடியரசு தூதுவர் (புதுடில்லி)
04.வக்தாங் ஜவோஷ்விலி - ஜோர்ஜிய தூதுவர் (புதுடில்லி)
05.மிகஹல் கஸ்கோ - பெலரூஸ் குடியரசின் தூதுவர் (புதுடில்லி)
06.வாகன் அப்யான் - ஆர்மேனியா குடியரசு தூதுவர்
07.யுவான் அன்டோனியோ மார்ச் புஜோல் - ஸ்பானிய குடியரசின் தூதுவர் (புதுடில்லி)
08. ரேமண்ட் செர்ஜ் பேல் - கொங்கோ குடியரசு (புதுடில்லி)
09.முன்யிரி பீட்டர் மைனா - கென்யா குடியரசு உயர்ஸதானிகர் (புதுடில்லி)
10. அலசேன் கொண்டே - கினியா குடியரசின் தூதுவர் (புதுடில்லி)