சினிமா பாணியில் 800 மில்லியன் ரூபாய் கொள்ளை ; திடுக்கிடும் பின்னணி அம்பலம்
கொழும்பு தலவத்துகொட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தில் இடம்பெற்ற 800 மில்லியன் ரூபா பெறுமதியான கொள்ளைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியும் வாகன சாரதியுமானடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளைய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையில், சந்தேகநபர் முல்லேரியாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து கொள்ளையிடப்பட்ட பணத்தில் 15.5 மில்லியன் ரூபா, கொள்ளைக்குப் பயன்படுத்தப்பட்ட சொகுசு வாகனம் மற்றும் திருடப்பட்ட பல மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்டவை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த செப்டம்பர் 1ஆம் திகதி முகமூடி அணிந்த மூன்று ஆயுதமேந்திய நபர்கள் குறித்த முகவர் நிலையத்திற்குள் புகுந்து, ஊழியர்களை அச்சுறுத்தி முழங்காலிடச் செய்து தாக்கிய பின்னர், 650 மில்லியன் ரூபா ரொக்கம் மற்றும் 150 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.

விசாரணைகளில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த முகவர் நிலையத்தில் முன்னர் உதவிப் பிரதிநிதியாக பணியாற்றியவர் என்பது தெரியவந்துள்ளது.
நிறுவன உரிமையாளரிடம் பெற்றிருந்த 15 மில்லியன் ரூபா கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் ஏற்பட்ட கடன் சுமை மற்றும் அண்மையில் முல்லேரியாவ பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வொன்றில் தனக்கு ஏற்பட்டதாகக் கூறப்படும் பகிரங்க அவமானம் ஆகியவை கொள்ளையைத் திட்டமிடத் தூண்டியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தனியாக கொள்ளையில் ஈடுபட முடியாத நிலையில், நவகாமுவ பொலிஸ் நிலையத்தின் முன்னாள் ஊழியர் ஒருவரின் உதவியை நாடியதாகவும், அவர் மூலம் பொமிரியா பகுதியைச் சேர்ந்த மேலும் இருவர் குழுவில் இணைக்கப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொள்ளைக்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர், பிள்ளியந்தல – சித்தமுல்ல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து கும்பல் கொள்ளை தொடர்பான திட்டத்தை வகுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போலி இலக்கத் தகடுகள்
ஹன்வெல்ல பகுதியில் உள்ள நிதி நிறுவனமொன்றில் இருந்து வாடகைக்கு பெறப்பட்ட வாகனத்திற்கு போலி இலக்கத் தகடுகளை பொருத்தி கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொள்ளைக்குப் பின்னர் கும்பல் மீண்டும் சித்தமுல்ல பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்று கொள்ளையிடப்பட்ட பணம் மற்றும் பொருட்களைப் பகிர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதன்படி, பிரதான சூத்திரதாரி 200 மில்லியன் ரூபாவையும், முன்னாள் பொலிஸ் ஊழியர் 150 மில்லியன் ரூபா மற்றும் தங்க நகைகளையும், ஏனைய இருவர் தலா 8 மில்லியன் ரூபாவையும் பெற்றுக் கொண்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
பிரதான சந்தேகநபர் தனது பங்கில் இருந்து 5 மில்லியன் ரூபாவை பொமிரியா பகுதியைச் சேர்ந்த நண்பரிடம் பாதுகாப்பிற்காக வழங்கியுள்ளதாகவும், மேலும் 1.3 மில்லியன் ரூபாவை செலவிட்டு அடகு வைக்கப்பட்டிருந்த நிலத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், முல்லேரியாவ பகுதியில் பல பெண்களிடம் பெற்றிருந்த கடன்களையும் அவர் செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சந்தேகநபரின் பங்கிலிருந்த 300,000 ரூபாவைத் தவிர ஏனைய பணம் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் அடையாள அணிவகுப்பிற்காக கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.