இலங்கையில் 80% மரணங்களுக்கு காரணம் தொற்றா நோய்களே ; வெளியான தகவல்
நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் 80 சதவீதம் மரணங்கள் தொற்றா நோய்களினாலேயே ஏற்படுகின்றன எனவும், அவற்றில் உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவையே முதன்மையான காரணங்களாகக் காணப்படுகின்றன எனவும் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அதிநவீன 'இருதயப் பராமரிப்பு வளாகத்தின்' கட்டுமானப் பணிகளை நேற்று (16) புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகக் கடுமையான பாதிப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதமானோரின் நிலைமையே தப்போது சரியான கட்டுப்பாட்டில் உள்ளது.
அதேபோல, நீரிழிவு நோயாளிகளில் 25 சதவீதமானோரின் நிலைமையே உரிய முறையில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகிய இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இவற்றால் ஏற்படும் மிகக் கடுமையான பாதிப்பு மாரடைப்பு ஆகும்.
சிங்கப்பூரில் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு சிறப்பு மருத்துவப் பரிசோதனை; விசாரணையில் இருந்து தப்பிக்க ஆடும் நாடகமா?
இந்த நவீன கொள்ளைநோயைக் கட்டுப்படுத்துவதே தற்போதைய சுகாதார அமைப்பின் முன் உள்ள மிகப்பெரிய சவாலாகும்.
நாட்டின் சனத்தொகை அமைப்பு மற்றும் நோய் முறைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப சுகாதாரப் பராமரிப்பு அமைப்பை மாற்றியமைக்க அரசாங்கம் 03 முக்கிய கூறுகளைச் செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, சமூக மற்றும் தடுப்புச் சுகாதார முறைகளை வலுப்படுத்த வேண்டும். வைத்தியசாலைச் சேவைகளை ஒருங்கிணைத்து வலையமைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.
அத்துடன், அநுராதபுரத்தில் அமைக்கப்படும் இருதயப் பராமரிப்பு வளாகம் போன்ற அதிநவீன சிறப்பு மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும்.
ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு இத்திட்டங்களை நாடு முழுவதும் விரிவுபடுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.