ஈரான் கப்பல் தாக்குதல் குறித்து பிரதி அமைச்சர் வெளியிட்ட தகவல்
இலங்கை கடற்பரப்பில் தாக்குதலுக்கு இலக்கான ஈரானிய கப்பல் தொடர்பில் பிரதி வெளிவகார அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தகவல் வெளியிட்டுள்ளார்.
இதுவரையில் குறித்த கப்பலில் தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து 80 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் கொழும்பு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
ஐரிஸ் டெனா (IRIS Dena)என்ற கடற்படை கப்பலே இவ்வாறு முழ்கடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா ராணுவத்தின் நீர்மூழ்கிக் கப்பல் இந்த தாக்குதலை நடத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு இந்திய துறைமுகத்திலிருந்து ஈரான் நோக்கி பயணித்த கப்பலே இவ்வாறு இலங்கையில் வைத்து தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளர்ர்.
இந்த கப்பலில் குறைந்தபட்சம் 150 பேர் பயணித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அமெரிக்கா இந்த தாக்குதலுக்கு உரிமை கோரி உள்ளதுடன் தாக்குதலை மேற்கொண்டதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .