தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகள் திறப்பு ; மக்களுக்கு எச்சரிக்கை
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் (Department of Irrigation) தெரிவித்துள்ளது.
பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் ; அதிர்ச்சிகரமான சம்பவம்!
இதற்கமைய, தற்போது நீர்த்தேக்கத்திலிருந்து வினாடிக்கு 5,500 கன அடி நீர் தெதுரு ஓயாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றது.

நீர்த்தேக்கத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு மற்றும் நிலவும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப, திறக்கப்படும் வான்கதவுகளின் அளவு மேலும் அதிகரிக்கப்படலாம் அல்லது மாற்றமடையலாம் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதனால், தெதுரு ஓயாவின் கீழ்நிலைப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், நீரின் மட்டம் அதிகரிப்பது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.