எகிறிய விலைகளால் 75 சத வீதம் மூடப்பட்ட கடைகள்!
மரக்கறிகளின் விலை உயர்வு காரணமாக நாட்டில் 75 சத வீதமான சிறியளவிலான சில்லறை மரக்கறி விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .
பெரும்பாலான மரக்கறிகளின் விலை 100 சத வீதத்தால் அதிகரித்ததால் மரக்கறிகளின் தேவை குறைந்ததாக மொத்த வியாபாரிகள் கூறினர்.
மரக்கறிகளின் விலை உயர்வால் பல நுகர்வோர் 100 - 250 கிராம் வரை மரக்கறிகளை வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
சில்லறை கடைகள் பூட்டு
அத்துடன் காய்கறிகள் விற்பனை செய்யப்படாததால் பழுதடையும் மரக்கறிகளை தினமும் அகற்ற வேண்டியிருப்பதாக தெரிவித்த மொத்த வியாபாரிகள். சில்லறை மரக்கறி வியாபாரிகளை அதிகமானோர் கடைகளை மூடியுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, சில்லறை மரக்கறி வியாபாரம் தடைப்பட்டுள்ளதால் பொருளாதார நிலையங்களுக்கு வரும் மொத்த வியாபாரிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துள்ளதாக பொருளாதார நிலையங்களின் அதிகாரிகள் கூறுகின்றனர்.
நாட்டில் மிகவும் வறண்ட காலநிலை, பலத்த மழை மற்றும் சில பகுதிகளில் காற்றுடன் கூடிய நிலை காரணமாக மரக்கறி அறுவடைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .