7 அறிவுடையவர் அமெரிக்காவிலிருந்து கோப் குழுவை வழி நடத்துவார்! விமல் சீற்றம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை எனவும், மாறாக ஏழு அறிவுடையவரின் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து வெட்கப்பட வேண்டும் என்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச சபையில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வு
சபாநாயகர் தலைமையில் இன்று (04) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது கோப் குழுவுக்கு சுயாதீன தரப்பினரின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது விமல் வீரவங்ச மேலும் குறிப்பிடுகையில்,
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் நாடாளுமன்ற தெரிவு குழுவுகளுக்கு நியமிக்கப்படவில்லை.
அத்துடன் ,கோப் குழுவின் உறுப்பினர் நியமனத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை. ஏழு அறிவுடையவரின் உதவியாளர்கள் கோப் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏழு அறிவுடையவர் அமெரிக்காவில் இருந்துகொண்டு கோப் குழுவையும் இனி வழி நடத்துவார்.
இது வெட்கப்பட வேண்வேடிய ஒரு விடயம் என தெரிவித்த விமல் வீரவங்ச கோப் குழு உறுப்பினர் நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்திக்கொள்ளப்பட வேண்டும் என்றார்.