கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி
இந்தியா பிகாரில் சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உட்பட 7 பேர் பலியான சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் மாநிலம், ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்தேஷ்வர்நாத் கோயிலில் ஆண்டுதோறும் புனித ஷ்ராவண் மாதத்தில் நடைபெறும் திருவிழாவுக்காக பக்தர்கள் ஏராளமானோர் நள்ளிரவு முதலே குவிந்திருந்தனர்.
குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட இந்த சிவன் கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றது. பிஹார் மாநிலம் ஜெஹனாபாத் மாவட்டத்தில் பராவர் மலைப்பகுதியில் உள்ள பாபா சித்தேஸ்வரா நாத் கோயிலில் நேற்று (11) கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இங்கு ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் நிகழும் இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில், நேற்றும் இந்த விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்திருந்தனர்.
கட்டுக்கடங்காமல் வந்த கூட்டத்தால் இன்று (12) அதிகாலை நெரிசல் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
தன்னார்வலர்கள் தடியடி
அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதில் நெரிசலில் 7 பேர் பலியானதுடன் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
உடனடியாக காயமடைந்த பக்தர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகின்றது.
கோயிலில் இருந்த பக்தர் ஒருவர் கூறுகையில்,
பூ விற்பனையாளருடன் ஏற்பட்ட சண்டையில் தன்னார்வலர்கள் தடியடி நடத்தியதால் கூட்ட நெரிசலுக்கு வழிவகுத்தது, அப்போது நிர்வாகத்தினர் யாரும் இல்லை. காவல்துறை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியத்தால் இது நடந்தது என்றார்.
அதேவேளை கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னார்வலர்கள் லத்திகளைப் பயன்படுத்தியதை ஜெகனாபாத் துணைப் பிரிவு அதிகாரி விகாஷ் குமார் மறுத்துள்ள நிலையில் ஆயயத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.