யாழில் புகையிரத்தத்தில் களவுபோகும் டீசல்; ஊழியர்களும் உடந்தையா?
யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் புகையிரதத்தில் தொடர்ச்சியாக டீசல் திருடுபோகின்றமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 9ம் திகதி காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில், இரவு வேளையில் புகையிரதம் தரித்து நின்றபோது இனந்தெரியாத குழுவொன்று டீசலை திருடியுள்ளது.
ஊழியர்களும் உடந்தையா?
இந்த திருருட்டு புகையிரத நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்ட அதிகாரிகளால் குறித்த சம்பவம் அம்பலத்துக்கு வந்துள்ளது. இதன்போது திருட்டில் ஈடுபட்ட கும்பல் தப்பிச்சென்ற நிலையில் நான்கு 20 லீற்றர் கொள்கலன்களில் டீசல் நிரப்பப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை புகையிரத எரிபொருள் தாங்கியின் திறப்புக்கள் அனுராதபுரத்திலேயே இருப்பதாக கூறப்படும் நிலையில், குறித்த திருட்டுக்கு புகையிரத நிலைய ஊழியர்களும் உடந்தையாக செயற்பட்டார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ச்சியாக எரிபொருள் தாங்கியில் இருந்து எரிபொருள் திருடப்பட்டு வந்த நிலையில் சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக காங்கேசன்துறை பொலிஸார், மற்றும் புகையிரத திணைக்களத்தினர் தனித்தனியே விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாக கூறப்படுகின்றது