ரூ. 7.5 பில்லியன் நிதி மோசடி ; வெல்லம்பிட்டியவில் மேலும் ஒருவர் கைது
Sri Lanka Police
Sri Lanka
Crime
FCID - Financial Crimes Investigation Division
By Sahana
2024 - 2025 காலப்பகுதியில் பொருட்கள் இறக்குமதி செய்வதாகக் கூறி, 6 போலியான நிறுவனங்கள் மூலம் 25 மில்லியன் அமெரிக்க டொலர்களை (சுமார் 7.5 பில்லியன் இலங்கை ரூபாய்) வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டவர் 25 வயதுடைய சந்தேகநபர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளைக் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US