பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி கூறிய 6 இரகசியங்கள்!
பிரித்தானியாவில் விரைவில் பொதுத்தேர்தல்நடைபெற உள்ளது. இந்த நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்தி தனது கணவருக்கு ஆதரவாக ஒரு அன்பான பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், தனக்கும், ரிஷி சுனக்கிற்கும் இடையே உள்ள பொதுவான விடயங்களை பற்றி பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில்,
உங்களுக்குள் உள்ள பொதுவான விடயம் என்ன என்று மக்கள் எப்போதும் எங்களிடம் கேட்கிறார்கள்.
நண்பர்களை மீண்டும் சந்திப்பது, ஸ்பானிஷ் உணவுகளை சாப்பிடுவது, இருவருக்கும் இடையிலான பகிர்ந்து கொள்ளும் மதிப்புகள், கடின உழைப்பு, வாழ்க்கையில் வெற்றி பெற வழி என்பதில் அதிக நம்பிக்கை வைத்திருப்பது, நம் குழந்தைகளுக்கு இன்று உள்ளதை விட சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என்பதில் நம்பிக்கை வைப்பது, ஹாரோவில் மக்களின் முக்கியமான மதிப்புகள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு விரும்பும் எதிர்காலம் பற்றி பேசுவது ஆகியவற்றை குறிப்பிட்டுள்ளார்.