ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு... இலங்கையர்களுக்கு பாதிப்பா?
சவுதியில் தற்போது நிலவும அதிக வெப்ப காலநிலையால் ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் 6 பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தில் உயிரிழந்த 6 பேரும் ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர்கள் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்றையதினம் (15-06-2024) தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு (2024) வருடாந்த கூட்டத்தின் போது வெப்பநிலை 48 டிகிரி செல்சியஸை (118 டிகிரி பாரன்ஹீட்) எட்டக்கூடும் என்று சவுதி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
1.8 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இந்த ஆண்டு ஹஜ்ஜில் பங்கேற்கின்றனர் என்று சவுதி பொது ஆணையம் தெரிவித்துள்ளது.
ஹஜ் என்பது உலகின் மிகப்பெரிய மதக் கூட்டங்களில் ஒன்றாகும் மற்றும் சவுதி அரேபியாவின் மிகப்பெரிய வருடாந்திர நிகழ்வு ஆகும்.
இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்த ஹஜ் யாத்திரிகளுக்கு எவ்விதமான பாதிப்பு இல்லையென அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.