ரஷ்ய இராணுவத்தில் இணைந்த 59 இலங்கையர்கள் பலி; அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமைச்சர்
உக்ரைன் ரஷ்ய போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ள இலங்கையர்களில் 2025 ஜனவரி 20 ஆம் திகதி வரையில் 59 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் இன்று (07) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) நாடாளுமன்றத்தில் இதனைத் தெரிவித்தார்.
முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்ட யாழ் இளைஞர்கள்
ரஷ்ய இராணுவத்தில் 554 இலங்கையர்கள் இணைந்துள்ளதாகவும், அவர்களில் யாரும் வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் இலங்கையிலுள்ள உறவினர்களுடன் தொடர்பைப் பேணுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுக்குமாறு ரஷ்யாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக விஜித ஹேரத் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை கடந்த காலங்களில் யாழில் இருந்து ஐரோப்பாவிற்கு சென்ற இளைஞர்கள், முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டதாக காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.