22 பெண்களை மணந்த நபர் ; மனைவிகளுக்காக செய்த செயல் ; விசாரணையில் ஆடிப்போன பொலிஸார்
கேரளாவில் மாவட்டத்திற்கு ஒரு பெண் என 22 பெண்களை திருமணம் செய்து மோசடி செய்த நபர் பொலிஸாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார்.
திருவனந்தபுரம் அருகே ஆற்றிங்கல் பகுதியில் சில நாட்களுக்கு முன்பு சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடமிருந்து தங்க சங்கிலியை பாகுலேயன் பறித்துச் சென்றுள்ளார்.

22 திருமணங்கள்
அவரை மடக்கிப்பிடித்த பொலிஸார் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது மனைவிக்காக நகைப்பறிப்பில் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார். அப்படியானால் உனது மனைவியையும் விசாரிக்க வேண்டும் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அதற்கு எந்த மனைவியை விசாரிக்கப் போகிறீர்கள் என கேட்டுள்ளார். அப்படியானால், உனக்கு இரண்டு மனைவிகள் இருக்கிறார்களா? என பொலிஸார்கேட்டுள்ளனர். மாவட்டத்திற்கு ஒரு மனைவி என 22 மனைவிகள் தனக்கு இருப்பதாக அவர் கூற அங்கிருந்த அனைவரும் திகைத்துப் போயினர்.
அதாவது பாகுலேயன் கணவனை இழந்தவர்கள், விவாகரத்து செய்த பெண்கள் என கண்ணில் பட்டவர்களுக்கெல்லாம் ஆதரவு கொடுத்திருக்கிறார். மொத்தம் 22 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருக்கிறார்.
பொழுதுபோக்கிற்காக இன்னும் 2, 3 முறை ஈரானை தாக்குவோம் ; ட்ரம்பால் உலகிற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து
என்னதான் 22 திருமணங்களை முடித்திருந்தாலும், அனைத்து மனைவிகளுக்கும் நகைகளைப் போட்டு அழகு பார்த்திருக்கிறார் பாகுலேயன். ஆனால், அனைத்துமே திருட்டு நகைகள் என்பது அவருக்கு மட்டுமே தெரியும். பூட்டப்பட்டு கிடக்கும் வீடுகள் மற்றும் சாலையில் நடந்து செல்லும் பெண்களை குறிவைத்து தனது கைவரிசையை காட்டியுள்ளார்.
பாகுலேயன் மீது கேரளாவில் 50-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன என்பது அதன் பிறகுதான் பொலிஸாருக்கே தெரியவந்தது.
இதையடுத்து பாகுலேயனை பொலிஸார் ஆற்றிங்கல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டுவந்த பலே பாகுலேயன் 22 பெண்களை மணந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.