பெறாமகளை துஸ்பிரயோகம் செய்தவருக்கு ஐம்பது வருட கடூழிய சிறை
கண்டியில் தனது சொந்த சகோதரனின் பத்து வயது மகளை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐம்பது வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கபப்ட்டுள்ளது.
கண்டி மேல் நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட மூன்று தனித்தனி குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேக நபருக்கு ஐம்பது வருட கடூழிய சிறை தண்டனை வித்தித்து கண்டி மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
இதன்படி, இந்த விடயம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தனிதனி குற்றச்சாட்டுகளின் முதல் மற்றும் இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு இருபது வருடங்களும், மூன்றாவது குற்றச்சாட்டிற்கு பத்து வருடமுமாக ஐம்பது வருட சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பத்து இலட்சம் ரூபா நட்டஈடு வழங்குமாறும் , முன்வைக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு தனித்தனியாக பதினைந்தாயிரம் ரூபாய் அபராதம் செலுத்துமாறும் செலுத்த தவறினால் மேலும் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.