நீர்கொழும்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட சுற்றுவளைப்பில் 50 சந்தேக நபர்கள் கைது
நீர்கொழும்பு பொலிஸ் பிரிவினர் மேற்கொண்ட அதிரடி சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றங்களுக்காக 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் 50 சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச் சுற்றிவளைப்பு நேற்று திங்கட்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டதாக நீர்கொழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அச் சுற்றுவளைப்பானது நேற்று (16) காலை 08.00 முதல் 11.00 வரை நீர்கொழும்பு பொலிஸ் பிரிவின் 208 குழுக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சோதனை நடவடிக்கையில் 6 கஞ்சா போதைப்பொருள் வழக்குகள், 6 ஹெரோயின் போதைப்பொருள் வழக்குகள், 9 திறந்த பிடியாணைகள், 19 பிடியாணைகள், 25 சட்டவிரோத கசிப்பு வழக்குகள், 2 கோடா வழக்குகள், 2 ஐஸ் போதைப்பொருள் வழக்குகள் என சுமார் 69 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 50 சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சோதனையில் 14 ஆயிரத்து 872 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருள், 62 ஆயிரம் மில்லிகிராம் கசிப்பு, 34 ஆயிரத்து 500 மில்லிகிராம் கோடா மற்றும் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (17) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.