சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைது
இலங்கையில் இறக்குமதி செய்ய அல்லது பயன்படுத்தத் தடைசெய்யப்பட்ட அதிக எஞ்சின் கொள்ளளவு (சி.சி) கொண்ட 5 அதிவேக மோட்டார் சைக்கிள்களை யாழ்ப்பாணப் பொலிஸார் அதிரடியாகக் கைப்பற்றியுள்ளனர்.
மேலதிக தீவிர விசாரணை
கைப்பற்றப்பட்ட இந்த மோட்டார் சைக்கிள்களின் பதிவுகள், சான்றிதழ்கள் மற்றும் இலக்கத்தகடுகளில் முறைகேடுகள் மற்றும் மோசடிகள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தற்போது பொலிஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள இந்த வாகனங்கள் தொடர்பாக மேலதிக தீவிர விசாரணைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.
விசாரணைகளின் அடிப்படையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள்களையும் அது தொடர்பான அறிக்கையையும் விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சட்ட நடவடிக்கை எடுக்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.