பல பிரச்சனைகளை சந்திக்க போகும் 5 ராசிக்காரர்கள்
நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் மாதந்தோறும் ராசியை மாற்றுவார். சூரியன் ராசியை மாற்றும் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் தற்போது சூரியன் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் 2023 ஜூன் 15 ஆம் திகதி சூரியன் புதன் ஆளும் மிதுன ராசிக்கு செல்கிறார். இதனால் தமிழ் மாதமான ஆனி மாதம் பிறக்கிறது. சூரியன் ராசியை மாற்றும் போது அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படும்.
ஆனால் சூரியன் மிதுன ராசிக்கு செல்லும் போது 5 ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள்.
குறிப்பாக தொழிலில் பல தடைகளை சந்திக்கவுள்ளார்கள். பண பிரச்சனைகளை சந்திக்கப் போகிறார்கள். முக்கியமாக திருமண வாழ்வில் சிக்கல்களை சந்திக்கவுள்ளார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சாதகமற்றதாக இருக்கும்.
தொழில்
தொழில் ரீதியாக பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பேச்சால் மன கசப்புகள் அதிகரிக்கும்.
குடும்பம்
குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடனான உறவு மோசமடையக்கூடும். குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப்படலாம்.
மேலும் தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார்.
தொழில்
இதனால் இக்காலத்தில் தினமும் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உறவுகள் கடுமையான பேச்சால் உறவுகள் பாதிக்கப்படும்.
இக்காலத்தில் அதிக ஆற்றலுடன் இருந்தாலும் அதனால் நன்மைகளை விட தீமைகளையே பெறக்கூடும்.
மேலும் இக்கால கட்டத்தில் மிகவும் ஆக்ரோஷமாக இருப்பீர்கள். இதனால் உறவுகளில் பிரச்சனைகள் அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் திடீரென்று பல பிரச்சனைகள் வரும்.
உறவு
தந்தையுடனான உறவு மோசமடையக்கூடும். ஆரோக்கியம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது. பயணம் மேற்கொள்ளும் போது உடைமைகளை இழக்க நேரிடும்.
தொழில்
தொழிலில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு விருப்பமில்லாத இடமாற்றம் கிடைக்க வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்காது.
வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நீதிமன்ற சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்கள்
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் தங்கள் வேலையில் மட்டும் கவனத்தை செலுத்த வேண்டும்.
தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கக்கூடும்.
யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாதீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் இக்காலத்தில் குடும்பத்தில் சண்டைகள் வர வாய்ப்புள்ளது.
திருமண வாழ்க்கை
திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் வரக்கூடும். இக்காலத்தில் உங்கள் வேலையில் எடுக்கும் சில தவறான முடிவுகளால் சிக்கலில் சிக்க வாய்ப்புள்ளது.
தொழில்
தொழிலில் நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு ரிஸ்க்கையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள்.
பயணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இக்காலத்தில் உங்களை யாரேனும் ஏமாற்றலாம்.