தொலைக்காட்சியால் ஆபத்தான நிலையில் 5 வயது சிறுமி
தொலைக்காட்சிப் பெட்டி 5 வயதான சிறுமி மீது விழுந்ததில் சிறுமி உணர்வற்ற நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்றிரவு (11) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
மேலதிக சிகிச்சை
வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுமி தொலைக்காட்சி பெட்டி வைக்கப்பட்டிருந்த மேசையில் ஏறிய போது மேசையில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி சிறுமி மீது விழுந்துள்ளது.
இச் சம்பவத்தில் திடீரென்று மயக்கமடைந்த சிறுமி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லப்பட்டிருந்தார்.
பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.