விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் விபத்தில் உயிரிழப்பு
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 5 வயதான சிறுவன் ஒருவர் வேனில் மோதி உயிரிழந்துள்ளார்.
வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் வீதியை நோக்கி ஓடியபோது வேன் ஒன்று மோதியதிலேயே இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் சிறுவனுக்கு இலேசான காயங்கள் ஏற்பட்டிருந்தது என்றபோதும் அவர் இரத்த வாந்தி எடுத்தமையால் வேனின் சாரதி அவரை கொழும்பு லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சிறுவன் சேர்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வேன் சாரதி கைது செய்யப்பட்ட நிலையில், சம்பவ நேரத்தில் அவர் மதுவோ அல்லது போதைப்பொருளோ எடுத்திருக்கவில்லை என்பது தெரிய வந்துள்ளது.