மசாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி; சிக்கிய 5 அழகிகள்!
பேலியகொடை - புளுகஹ சந்தி பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் பேலியகொடை பொலிஸாரால் நேற்று (8) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பேலியகொடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்டவர்களில் விபச்சார தொழிலில் ஈடுபட்ட நான்கு பெண்களும் மசாஜ் நிலையத்தின் பெண் உரிமையாளும் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைதானவர்கள் வெள்ளவத்தை, கிரிமெட்டியாவ, ஹொரணை, கடவத்தை மற்றும் நீர்கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 25 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். மேலும் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.