இலங்கையில் ஐந்து மடங்கு அதிகமான மக்கள் பாதிக்கபட்டுள்ளதாக தகவல்!
இலங்கையில் சீரற்ற கொரோனா பரிசோதனைகள் இல்லாத நிலையில் நாடு ஒரு பேரழிவிற்கு வந்துள்ளது.
மேலும், தற்போது அடையாளம் காணப்படும் நோயாளர்களை விடவும், ஐந்து மடங்கு அதிகமான மக்கள் நாட்டில் பாதிக்கப்பட்டு உள்ளனர் என சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் (Ravi Kumudesh) தெரிவித்தார்.
இதேவேளை, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் அதிகபட்ச திறன் இருந்த போதிலும், வெளிநாட்டு நபர்களை குறிவைத்து, அவர்களை தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி, அதன் மூலம் கமிஷன் பெறும் நடவடிக்கைக்கு சுகாதார அமைச்சகம் தயாராகி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன், சர்வதேச விமான நிலையங்களில் உள்ள ஆய்வகங்களில் இலங்கை வீரர்களுக்கு இலவசமாக சோதனைகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.
அவர்கள் குறைந்த அளவு பணத்தை செலவழிப்பதற்கு பதிலாக, தனியார் மருத்துவமனை ஆய்வகங்களுக்கு நிறைய பணம் செலவழிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரவி குமுதேஷ் வலியுறுத்துகிறார்.