யாழில் ஒருவரை கட்டி வைத்து தாக்கி காணொளி வெளியிட்ட ஐவருக்கு நேர்ந்த கதி!
யாழ்.உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடாத்திய சம்பவத்தில் கைதான 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த வாரம் உரும்பிராய் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றுக்கு வந்த ஒருவர், அப்பகுதியில் நிலத்தில் விழுந்து கிடந்த தங்க ஆபரணத்தை எடுத்து வெதுப்பகத்தில் வழங்கியுள்ளார்.
சில தினங்களுக்கு பின்னர் மேற்படி நகை உரியவர்களிடம் வழங்கப்பட்டதா என வெதுப்பகத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நிலையில் வெதுப்பகத்திலிருந்த இளைஞர் குழு குறித்த நபரை கட்டிவைத்து தாக்கி காணொளியையும் வெளியிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் 5 பேரை பொலிஸார் கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட 5 பேரையும் யாழ்.மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் இன்றையதினம் (07-01-2025) பொலிஸார் முற்படுத்தப்பட்ட நிலையில் ஜனவரி 15 வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதிவான் லெனின்குமார் உத்தரவிட்டுள்ளார்.