தமிழ் பாடசாலையொன்றில் இன்று ஏற்பட்ட பரபரப்பு! மாணவர்கள் மருத்துவமனையில்
தமிழ் பாடசாலையொன்றில் திடீர் சுகயீனமடைந்த 42 மாணவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்தனை தமிழ் வித்தியாலய மாணவர்களே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மாணவ மாணவிகள்
தரம் 6 தொடக்கம் 11ஆம் தரம் வரை கல்வி கற்கும் 13 மாணவர்களும் 29 மாணவிகளுமே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுள் சில மாணவர்கள் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
எனினும் , சில மாணவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் இவர்களில் நிலை சாதாரணமாக உள்ளதென்றும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்துள்ளன.
எனினும் மாணவர்களின் திடீர் சுகயினத்திற்கான காரணம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.