காவல்துறையின் K-9 பிரிவை வலுப்படுத்த நெதர்லாந்திலிருந்து 40 மோப்ப நாய்கள் இலங்கைக்கு வருகை
காவல்துறையின் மோப்ப நாய் (K-9) பிரிவை வலுப்படுத்தும் நோக்கில், நெதர்லாந்திலிருந்து 40 நாய்கள் இன்று (29) நாட்டை வந்தடைந்துள்ளன.
ஜேர்மன் ஷெப்பர்ட் (German Shepherds), லாப்ரடோர்ஸ் (Labradors), பெல்ஜியன் மலினோயிஸ் (Belgian Malinois) மற்றும் பீகிள்ஸ் (Beagles) ஆகிய நான்கு வகைகளைச் சேர்ந்த, பயிற்சியளிக்கப்படாத ஒரு வயதுடைய நாய்களே இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளன.

வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருட்களைக் கண்டறிதல், அத்துடன் குற்றப் புலனாய்வு நடவடிக்கைகள் உள்ளிட்ட காவல்துறை பணிகளுக்கு உதவும் வகையில் இவற்றிற்கு விசேட பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் புதிய வரவுகள் காவல்துறையின் மோப்ப நாய் பிரிவின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.