கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதலில் பெண்கள் உட்பட 7 பேர் வைத்தியசாலையில்
கண்டி உடதும்பர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெதமஹானுவர கலகெலே பிரதேசத்தில் ரொட்டிக்கடை ஒன்றில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், நபரொருவர் அங்கிருந்த நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 7 பேர் காயமடைத்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று (14) பகல் இடம்பெற்றதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த அனைவரும் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உடதும்பர பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கத்திக்குத்து தாக்குதல் நடத்திய 33 வயதுடைய சந்தேகநபர் பிரதேசவாசிகளின் உதவியுடன் உடதும்பர பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை உடதும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.