24 ஆண்டுகளுக்கு பின் ஜனவரியில் உருவாக்கும் 4 அரிய ராஜயோகங்கள் ; ஜாக்பாட் அடிக்கும் ராசிக்காரர்கள்
ராஜயோகங்களானது கிரகங்களின் ராஜாவாக கருதப்படும் சூரியன், செல்வத்தின் காரணியான சுக்கிரன், புத்திகாரகன் புதன் மற்றும் கிரகங்களின் தளபதியாக கருதப்படும் செவ்வாய் ஆகியவற்றால் உருவாகவுள்ளன.

அதுவும் இந்த ராஜயோகங்களானது மகர ராசியில் லட்சுமி நாராயண ராஜயோகம், புதாதித்ய ராஜயோகம், மங்களாதித்ய ராஜயோகம் மற்றும் ருச்சக ராஜயோகம் உருவாகவுள்ளன.ஜனவரியின் நடுப்பகுதியில் உருவாகும் 4 அரிய ராஜயோகங்களால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த 4 ராஜயோகங்களால் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலில் திடீர் நிதி ஆதாயங்கள் கிடைக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்கள் நல்ல செய்திகளை பெறலாம். தொழிலதிபர்கள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் 4 ராஜயோகங்களால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். அதுவும் வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். மனநிலை சிறப்பாக இருக்கும். புதிய தொடர்புகளால் நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் ஜனவரியில் உருவாகும் 4 அரிய ராஜயோகங்களால் ஆளுமையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். தனித்துவமான தன்னம்பிக்கை அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் இரட்டிப்பு லாபத்தைப் பெறுவார்கள்.
