யாழில் பெரும் சோகம்; மூன்று வயது பாலகன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட திருமால்புரம், வல்லிபுரம் பகுதியில் இன்று (05) நண்பகல் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ரஜிவன் சுஜித் என்ற குழந்தையே உயிரிழந்தது. குழந்தை கிணற்றில் விழுந்த நிலையில் மீட்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
குறித்த குழந்தை வீட்டு முற்றத்தில் பலூனுடன் இருந்து விளையாடி கொண்டிருந்துள்ளது. பலூன் கிணற்றில் வீழ்ந்த நிலையில் அதை மீட்க முற்பட்ட போது தவறி விழுந்திருக்கலாம் என அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.