30 ஆயிரம் வாங்கிய தமிழ் அதிபருக்கு விளக்கமறியல்
மதிய உணவுக்கான விலைமனு கோரலை பெற்றுக்கொடுப்பதற்காக, 30 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்றதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அதிபர் விளக்கமறியலில் வைக்கபட்டுள்ளார்.
சம்பவத்தில் எலியகொட (தமிழ் வித்தியாலயம்) பாடசாலை ஒன்றின் அதிபரை எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இன்று (03) உத்தரவிட்டுள்ளார்.
30,000 ரூபா இலஞ்சம்
கடந்த 21 ஆம் திகதி கைது செய்யப்பட்டு அவிசாவளை நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அதிபரின் விளக்கமறியலே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.
விலைமனு கோரலை அனுமதிப்பதற்காக சந்தேகநபர் 30,000 ரூபாவை கேட்டதாகவும், ஆரம்பத்தில் 10 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.
பின்னர் , மீதி 20 ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொண்ட போதே கைது செய்யப்பட்டதாகவும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.