அக்டோபர் 28 முதல் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள்
ஜோதிடத்தின் படி கிரகங்களில் சந்திரன் மிகவும் வேகமாக நகரக்கூடிய கிரகமாகும். சந்திரன் ஒரு ராசியில் சுமார் இரண்டரை நாட்கள் வரை இருப்பதாக கூறப்படுகிறது.
சந்திரன் ராசியை மாற்றும் போது சில சமயங்களில் மற்ற கிரகங்களுடன் சேர்க்கை நிகழும். அந்த சேர்க்கையால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகக்கூடும்.
இந்த யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் தற்போது குரு பகவான் மேஷ ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சந்திரனும் மேஷ ராசியில் பயணிக்கவுள்ளார்.
அதுவும் அக்டோபர் 28 ஆம் திகதி சந்திரன் மேஷ ராசிக்குள் நுழைந்து, குருவுடன் இணைந்து கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த சேர்க்கையானது அக்டோபர் 30 ஆம் திகதி வரை நீடித்திருக்கும். இதனால் இந்த யோகமும் அக்டோபர் 30 வரை நீடித்திருக்கும்.
இப்போது குரு சந்திரன் சேர்க்கையால் மேஷ ராசியில் உருவாகவுள்ள கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டில் குரு, சந்திரன் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகத்தால், சில ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.
நிலுவையில் உள்ள பணிகள் இந்த யோகத்தால் வெற்றிகரமாக தொடங்கப்படும். நிதி நிலை வலுவாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
அலுவலகத்தில் உங்களின் வேலை உயர் அதிகாரிகளால் பாராட்டைப் பெறும். சிலருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகமானது அதிர்ஷ்டத்தை தரும். குடும்பத்தினருடனான உறவு இனிமையாக இருக்கும் மற்றும் அவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்புகள் கிடைக்கும்.
பணிபுரிபவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
பணிபுரிபவர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்
கடக ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் ஏற்படும். நிதி நிலை வழக்கத்தை விட வலுவாகும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த யோகத்தால் ஒரு பெரிய நல்ல மாற்றம் ஏற்படும்.
முக்கியமாக நல்ல லாபத்தைக் காண முடியும். சிலருக்கு தொழில் ரீதியாக இக்காலத்தில் ஜாக்பாட் அடிக்கும்.