இலங்கையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை? வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்!
புத்தளம் மாவட்டம் - சிலாபம், சிங்கபுர பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் கூரிய ஆயுதங்களால் குத்தியும், அடித்தும் கொல்லப்பட்டு வீட்டினுள் எரிக்கப்பட்டுள்ளதாக ஹலவத்த தலைமையகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்றிரவு (19-10-2024) இடம்பெற்றிருக்கலாம் என ஹலவத்த தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் தொழிலதிபரான 51 வயதுடைய எஸ். சேனாரத்ன, 44 வயதான மஞ்சுளா நிரோஷனி பண்டார, மற்றும் 15 வயது ஏ. நேத்மி நிமேஷா ஆகியோரே உயிரிழந்தனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இனறையதினம் காலை 6:00 மணியளவில், வீடு தீப்பிடித்து எரிவதாக நபரொருவர் ஹலவத்தை தலைமையக பொலிஸாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து பொலிஸார் சென்று வீட்டினுள் எரிந்து கொண்டிருக்கும் சடலங்களை கண்டெடுத்துள்ளனர்.
பொலிஸாரின் மேலதிக விசாரணையில், சடலங்கள் கூரிய ஆயுதத்தால் அடித்து கழுத்தை அறுத்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்த மரணங்களுக்கான காரணத்தை இதுவரை பொலிஸார் வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில் ஹலவத்தை தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.