வௌிநாட்டு ஆசை காட்டி ரூ. 3 கோடி ரூபாய் மோசடி ; சிக்கிய சந்தேகநபர்
நியூசிலாந்தில் வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் தொகையை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினர் பொரலஸ்கமுவ பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பெண்கள் மற்றும் ஆண்கள் இருசாராருக்கும் வேலைவாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி அவர்களுடன் ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மோசடி
நீண்டகாலமாக புலனாய்வுப் பிரிவினரின் பிடியில் இருந்து தப்பி தலைமறைவாக இருந்த இந்த சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நடுவானில் விமானிகளிடையே கத்திக்குத்து ; 174 உயிர்களை காப்பாற்ற 6 வயது சிறுமியும் காரணம்? வெளியான அதிர்ச்சி தகவல்
இதேவேளை, வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும்போது பதிவு செய்யப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களிடம் எவரும் தங்களது தகவல்கள், பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்க வேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.