லொறி மோதி உயிரிழந்த மூன்று பிள்ளைகளின் தந்தை
பாதசாரி கடவையில் லொறி மோதியதில் மூன்று பிள்ளைகளின் தந்தை (75) உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
நிட்டம்புவ வயங்கொட வீதியில் நிட்டம்புவ வித்யானந்த விகாரைகைக்கு அருகில் இன்று (02) காலை இச் சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிட்டம்புவ புறநகர் பகுதியைச் சேர்ந்த கே.எம்.ஆரியசேன என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் நிட்டம்புவ வித்யானந்த விகாரைக்கு அருகில் உள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடக்கும்போது லொறியால் மோதி பதின்மூன்று மீற்றருக்கு மேல் தூக்கி வீசப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி லொறியை அதிவேகமாக செலுத்தியதால் அதனை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.