ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி இல்லை; தங்கிய வெளிஆட்கள் 3,089 பேர்
2025ஆம் ஆண்டில் ஜனாதிபதி மாளிகைகளில் ஜனாதிபதி தங்கியிருக்காத போதிலும், நாடு முழுவதும் உள்ள அந்த மாளிகைகளில் மொத்தம் 3,089 பேர் தங்கியுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே காலப்பகுதியில், அந்த மாளிகைகளில் மூன்று கூட்டங்கள் மட்டுமே நடைபெற்றுள்ளதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவு
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் பிற வசதிகளுக்காக கடந்த ஆண்டில் ரூ.32,982,675 செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கதிர்காமம், மஹியங்கனை மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகைகளில் 2025ஆம் ஆண்டு எந்தக் கூட்டமும் நடத்தப்படாததுடன், எவரும் தங்கியிருக்கவில்லை என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது.
இருப்பினும், அந்த மூன்று மாளிகைகளின் மின்சாரம், தொலைபேசி மற்றும் ஏனைய செலவுகளுக்காக ரூ.2,447,754 செலவிடப்பட்டுள்ளதாகவும் கணக்காய்வு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள ஏழு மாளிகைகள் கொழும்பு கோட்டை, கண்டி, அனுராதபுரம், கதிர்காமம், மஹியங்கனை, நுவரெலியா மற்றும் பெந்தோட்ட ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளன.