டெல்லியில் வலுக்கும் மாணவர்கள் போராட்டம்; 'Bitchat' செயலியை முடக்கும் அரசாங்கம்
நீட் தேர்வு தாள் கசிந்த விவகாரம் தொடர்பில் இந்திய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லியில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், அந்தப் பகுதியில் இணையச் சேவைகள் முடக்கப்பட்ட போதிலும், மாணவர்கள் பயன்படுத்தி வரும் 'Bitchat' செயலியை முடக்குவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இணைய வசதி அல்லது தொலைத்தொடர்பு கட்டமைப்பு சேவை இல்லாமலேயே, புளூடூத் இணைப்பைப் பயன்படுத்தி தகவல்களைப் பரிமாறிக்கொள்ளும் தொழில்நுட்ப வசதியை இந்த Bitchat செயலி கொண்டுள்ளது.

இணையச் சேவை முடக்கப்பட்ட நிலையிலும், மாணவர்கள் இந்த செயலி வாயிலாகத் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதால், அதனை முடக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.