யாழ் மாநகர எல்லைக்குள் அனுமதி பெறாத 25 தொலைத்தொடர்பு கோபுரங்கள்
யாழ் மாநகர எல்லைக்குள் நிறுவப்பட்ட 35 தொலைத் தொடர்பு கோபுரங்களில் 25 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அனுமதி பெறாது நிறுவப்பட்டுள்ளதாக மாநகர சபை அமர்வில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் யாழ் மாநகர சபைகளிடம் பெற்ற மாதாந்த அமர்வில் குறித்த விடயம் தொடர்பில் மாநகர பிரதி முதல்வர் இமானுவேல் தயாளனால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
அதாவது யாழ் மாநகர சபை எல்லைக்குள் 35 தொலைத்தொடர்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் 10 தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கான அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் ஏனைய 25க்கு அனுமதி பெறாது அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைத்தொடர்பு கோபுரங்களும் கான அனுமதி பெறாத நிலையில் க மாநகர சபைக்கு வரவேண்டிய வருமானம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் போது கருத்து தெரிவித்த முதல்வர், பிரதம பொறியியலாளர் ஊடாக அடுத்த சபைக்கு முழுமையான விவரங்கள் சமர்ப்பிக்க ஏற்பாடு செய்வதாகவும் அதனைத் தொடர்ந்து மேல் அதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.