தமிழக முதலமைச்சர் விஜய்க்கு 24 மணி நேர Z+ பாதுகாப்பு ! உயரடுக்கு கமாண்டோக்கள்
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு உயர்மட்டப் Z+ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக Y பிரிவு பாதுகாப்பு வழங்கிய நிலையில் இன்றிலிருந்து Z+ பாதுகாப்பு மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 55 மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த Z+ பாதுகாப்பு என்பது இந்தியாவில் வழங்கப்படும் மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்பாகும்.

24 மணி நேரமும் முதலமைச்சருக்கு பாதுகாப்பு
இது பெரும்பாலும் முதலமைச்சர்கள், உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் முக்கியப் பிரமுகர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அடுக்கில் பொதுவாக 55 வீரர்கள் இருப்பார்கள் என கூறப்படுகின்றது.
இதில் NSG-யின் உயரடுக்கு கமாண்டோக்கள் மற்றும் மாநில பொலிஸார் அடங்குவர். உதாரணமாக, குறிப்பிட்ட மாநிலத் தலைமைகளுக்காக 36 கமாண்டோக்கள், 2 பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (SP), 2 உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (ASP) மற்றும் 4 துணை பொலிஸ் கண்காணிப்பாளர்கள் (DSP) பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
முதலமைச்சர் விஜய்க்கு புல்லட் பேரொபி கார்கள், பைலட் வாகனங்கள் மற்றும் 24x7 பாதுகாப்பும் இதில் அடங்கும். அதுமட்டுமல்லாது முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு ஹெக்லர் & கோச் MP5 துணை இயந்திரத் துப்பாக்கிகள் போன்ற நவீன ஆயுதங்கள் வழங்கப்படுகின்றன.