இலங்கையில் 214,333 அதிகமானோர் கைது ; 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டம்
போதைப்பொருள் ஒழிப்பை நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டு வரும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய செயற்திட்டத்தின் கீழ், திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் வியாழக்கிழமை (25) வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் 215,526 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்போது, 214,333 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள்
கைது செய்யப்பட்டவர்களில் 3,112 பேருக்கு தடுத்து வைக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 360 பேரின் சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அதேவேளை, போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையானதாக அடையாளம் காணப்பட்ட 2,188 பேர் புனர்வாழ்வு சிகிச்சைக்காக சம்பந்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசேட நடவடிக்கைகளின் போது, சுமார் 1,964 கிலோகிராம் ஹெரோயின், 2,120 கிலோகிராம் ஐஸ், 289 கிலோகிராம் கொக்கைன், 5,818 கிலோகிராம் கஞ்சா, 479 கிலோகிராம் குஷ் மற்றும் 312 கிலோகிராம் ஹஷிஸ் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.