முதலமைச்சர் விஜய் பண்ணதுல என்ன தப்பு; நிர்மலா சீதாராமன் ஆதரவு!
தமிழக சட்டசபையில் முதலமைச்சர் விஜய் கூறிய குட்டிக்கதைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிய பதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புகார்களுக்கு பதில் சொன்ன முதலமைச்சர் விஜய் திமுக எல்லாத்துறைகளிலும் ஊழல் செய்திருப்பதாக பேசினார். ஆனால், இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

அரசியல் விமர்சனத்தை வேறு எங்கு செய்ய முடியும்?
அவர்கள் சென்ற பின் ஒரு குட்டி கதை சொன்ன முதல்வர் விஜய் ‘ஒரு முதியவர் வெயிலில் யாரையோ தேடிக் கொண்டிருந்தார்.. அருகில் இருந்த சிறுவன் ‘யாரை தேடுகிறீர்கள்?’ என்று கேட்டான். அதற்கு பெரியவர் ‘உங்க அப்பாவை காணோம்.. அவரைத்தான் தேடிக் கொண்டிருக்கிறேன்’ என்று சொன்னார்’ என சொல்லி கதையை முடித்தார்.
சட்டசபையில் தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இல்லாத நிலையில் அவரையும் அவரின் மகன் உதயநிதியையும் ஒப்பிட்டுதான் விஜய் இந்த கதையை சொன்னதாக பார்க்கப்பட்டது.
இது திமுகவினருக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் ‘இப்படியெல்லாம் பேச வேண்டாம்.. செங்கல்பட்டு கோர்ட்டில் கணவரை தேடும் மனைவி பற்றி கதை எல்லாருகும் தெரியும்’ என நாகரீகம் இன்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ‘அரசியல் விமர்சனத்தை சட்டப்பேரவையில் செய்யாமல் வேறு எங்கு செய்ய முடியும்? எதிர்கட்சியும் பதில் சொல்லட்டும்.. ஆளும் கட்சியும் பேசட்டும்.. அதில் ஒன்றும் தப்பில்லை’ என கூறியுள்ளார்.