2027ஆம் ஆண்டு தரம் ஒன்று மாணவர் சேர்க்கை ; விண்ணப்பங்கள் கோரல்
2027ஆம் கல்வியாண்டிற்காக அரச பாடசாலைகளின் தரம் ஒன்றில் மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலின் மூலம் இந்த அறிவிப்பு 2025 ஜூலை 4ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் ஒன்று மாணவர் சேர்க்கை தொடர்பான நடைமுறைகள், தகுதிகள் மற்றும் விண்ணப்பச் செயல்முறைகள் குறித்து விளக்கமளிக்கும் 25/2025 இலக்க வழிகாட்டிச் சுற்றுநிருபமும் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றுநிருபம் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்கள் அதனைப் பார்வையிட்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் இந்த வழிகாட்டல்களுக்கு அமைய முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.