புத்தாண்டின் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகம் ; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்
2026 புத்தாண்டின் முதல் வாரத்திலேயே சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகவுள்ளது. அது தான் கஜகேசரி ராஜயோகம். இந்த ராஜயோகமானது சந்திரன் மற்றும் குரு பகவானின் சேர்க்கையால் உருவாகிறது. அதுவும் இந்த ராஜயோகம் மிதுன ராசியில் உருவாகவுள்ளது. முக்கியமாக இது 12 ஆண்டுகளுக்கு பின் உருவாகப் போகிறது.

12 ஆண்டுகளுக்கு பின் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உருவாகும் கஜகேசரி ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மனநிலை மேம்படும். கடந்த கால முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்களின் திட்டங்கள் நல்ல லாபத்தைத் தரும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஆளுமை மேம்படும்.

கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டில் குரு சந்திர சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். பணிபுரிபவர்ளுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. தொழிலதிபர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலை தொடங்கும் எண்ணம் இருந்தால், இக்காலம் சிறப்பாக இருக்கும்.
