சூரிய பெயர்ச்சியால் மகா ராஜயோகம், பெறும் ராசிக்காரர்கள்
நவகிரகங்களின் தலைவனாக சூரிய பகவான் மாதத்திற்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றுவார். இவருடைய இடமாற்றம் அனைத்து ராசிகளுகளிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். சூரியன் சிம்ம ராசியின் அதிபதியாக திகழ்ந்த வருகின்றார்.
கிரகங்களின் ராஜாவான சூரியனின் ராசி மாற்றம் வரும் ஏப்ரல் 14 ஆம் திகதி நிகழப் போகிறது. இந்த பெயர்ச்சி மேஷ ராசியில் நடக்கப் போகிறது, இதனால் 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அவ்வாறு அதிர்ஷ்டம் பெறும் ராசிக்கள் எவையென நாம் இங்கு பார்ப்போம்.
மேஷ ராசி
மேஷ ராசியில் தான் சூரியன் பெயர்ச்சி அடையப் போகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சனியின் தாக்கத்தில் இருந்து நிம்மதி கிடைக்கும்.
ரிஷப ராசி
ரிஷப ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நன்மை உண்டாகும். தொழிலில் முன்னேற்றம் கிடைக்கும். நிதி ஆதாயம் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு, சூரியப் பெயர்ச்சியால் வருமானம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை உயரும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சியால் நன்மை நடக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கலாம். பெரிய சாதனைகளை புரியலாம். நிதி ஆதாயம் உண்டாகும்.
சிம்ம ராசி
சிம்ம ராசியின் அதிபதி சூரியன் பகவான் ஆவார், இதனால் இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். சனியால் கஷ்டப்படும் இவர்களுக்கு சூரிய பகவான் சற்று நிம்மதியை அளிப்பார். பணியிடத்தில் நன்மைகள் ஏற்படும்.