மகா சிவராத்திரியில் கோடீஸ்வர யோகம் பெற போகும் ராசிக்காரர்கள்
இந்து மதத்தில் மகாசிவராத்திரி பண்டிகைக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி பெப்ரவரி மாதம் 26 அன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டின் மகா சிவராத்திரி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில், இந்த நாளில் ஒரு அரிய மற்றும் தனித்துவமான கிரக சேர்க்கை நடைபெறவுள்ளது.
மகாசிவராத்திரி நாளில் உருவாகும் இந்த சதுர்கிரஹி யோகம் எந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்கும்? அது அவர்களது வாழ்வின் என்னென்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என நாம் இங்கு பார்ப்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு மகாசிவராத்திரி முதல் நல்ல நேரம் தொடங்கும். படிப்பு மற்றும் தொழிலில் பெரிய வெற்றி கிடைக்கும். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். ஆன்மீக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் அதிக லாபம் இருக்கும். கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். இது தவிர, ஆன்மீக பணிகளில் நாட்டம் ஏற்படும். மத ரீதியான பயணங்களை மேற்கொள்ளலாம். வெளிநாடு செல்வதற்காக விசாவிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு மஹாசிவராத்திரி முதல் நேரம் சிறப்பாக இருக்கும். இந்த கிரகங்களின் சேர்க்கை கடக ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். சூரியன், புதன், சனி மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்களின் அருளால் இந்த நேரத்தில் வணிகத்தில் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயம் ஆகும். இப்போது எடுக்கும் முடிவுகளை அவசரம் இல்லாமல் எடுக்க வேண்டும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளில் சிக்கித் தவித்தவர்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சிவரத்திரியில் உருவாகும் கிரகங்களின் சேர்க்கை நல்ல பலன்களை அளிக்கும். சனி பகவானின் விசேஷ அருளால் குடும்பத்தில் சொத்து தொடர்பாக இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கி சுமுகமான சூழல் இருக்கும். இந்த நேரத்தில் சிம்ம ராசிக்காரர்கள் உங்கள் கோபத்தையும் உந்துதலையும் கட்டுப்படுத்த வேண்டியிருக்கும். புதிய முதலீட்டைத் தொடங்க இது நல்ல நேரமாக இருக்கும். இப்போது செய்யும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள சுப காரியங்கள் இப்போது நல்ல படியாக நடந்துமுடியும். குடும்பத்துடன் ஒரு ஆன்மீகப் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கக்கூடும். இந்த நேரத்தில் நீங்கள் பொறுமையுடனும் புரிதலுடனும் செயல்பட்டால், உங்களுக்கு நன்மை பயக்கும் பலன்கள் கிடைக்கும்.