மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் 2024 ஆம் ஆண்டு விடுமுறைகள்!
2024 ஆம் ஆண்டில் அதிகளவிலான விடுமுறைகள் காணப்படும் நிலையில் பெரும்பாலான விடுமுறைகள் வெள்ளிக்கிழமை அல்லது திங்கட்கிழமைகளில் காணப்படுகின்றன.
இந்த ஆண்டில் வார இறுதிகளில் கிட்டத்தட்ட 10 விடுமுறைகள் காணப்படுகின்றன.
விடுமுறைகள் விபரம்
அவற்றில் ஜனவரி மாதம் 15 ஆம் திகதி தைப்பொங்கல் திருநாள் விடுமுறை திங்கட்கிழமை வருகின்றது.
அதன் பின்னர் பெப்ரவரி மாதத்தில் பௌர்ணமி விடுமுறை வெள்ளிக்கிழமை வருகின்கிறது. புனித வெள்ளி மற்றும் மகா சிவராத்திரி விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.
அத்துடன் சித்திரை மாதத்தில் தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறைகள் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வருகிறன. மே மாத பௌர்ணமி விடுமுறை வார இறுதியில் வருகின்றது.
ஜூன் மாதத்தில் பௌர்ணமி மற்றும் ஹஜ் பண்டிகை விடுமுறைகள் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.
ஆகஸ்ட் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை திங்கட்கிழமை வருகின்றது.
செப்டம்பர் மாதத்திலும் வார இறுதியில் விடுமுறை வருகின்றது.
மேலும் நவம்பர் மாதத்தில் பௌர்ணமி விடுமுறை மற்றும் முஹம்மது பிறந்த நாள் ஆகியனவும் வெள்ளிக்கிழமைகளில் வருகின்றன.
இந்நிலையில் குடும்த்துடன் விடுமுறைகளை கழிக்க விரும்போவோரிற்கு இந்த வருட விடுமுறைகள் மக்ிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.